வேலையில்லா வெளிவாரி பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படுமென துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் கலந்து கொண்ட சந்திப்பில் தெரிவித்தார்.
அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகளுடனான சந்திப்பு நேற்று கிண்ணியா அல் அதான் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.அதில் கருத்து தெரிவிக்கும போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் கருத்து தெரிவிக்கையில்,
அண்மையில் உள்வாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. அதில் 16,800உள்வாரி பட்டதாரிகளுக்குள் 800பட்டதாரிகள் வெளிவாரி பட்டதாரிகளாவர். மிகுதி பட்டதாரிகளும் விரைவில் உள்வாங்கப்படவுள்ளார்கள். இதற்கான ஆரம்ப கட்டமாக 8,000நியமனங்கள் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, செயலாளர் வீ.சிவஞானசோதி ஆகியோரை சந்தித்து இது விடயமாக கலந்துரையாடியுள்ளேன்.
அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதும் வெளிவாரி என்ற பாரபட்சமின்றி அரச துறையில் நியமனங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
Thinakaran

