Ads Area

சம்மாந்துறையில் இப்படி ஒரு கலைத்திறன் கொண்ட ஆளுமை!

கலையென்ற அம்சத்தில் கணக்கிட முடியத எத்தனையோ படைப்புக்கள் உள்ளன. இவ்வாறு பல அம்சங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் சமூகத்தில்தான் கலை மேலும் உயர்வு பெறுகின்றது.

இது போன்ற வரிசையில் பெரிதும் முன்னிலை வகிப்பதொன்றே திரையுலகு!.
அதிலும் இலங்கை திரைப்படத்துறையில் நமது மண்ணிலிருந்து ஒருவர் இயக்குனராகி, கதா பாத்திரம் ஏந்தி நடிப்பதென்பது பாராட்டுக்குரியதே!

அதைத் தான் 'முற்றத்து மல்லிகை மனப்பதில்லை - வட்டி எண் 303' என நேற்றைய தினம் சிறு பதிவு ஒன்று இட்டிருந்தேன். புரியாத பலர் அறியாத வகையில் எனக்கு பல 'கொமண்ட்ஸ்கள்' வழங்கியிருந்தனர்.

பேசியவர்கள் மார்க்கம் பேசியமையும், சமூகம் பற்றி கூறியமையும் சரிதான்!
ஆனால், அவ்வாறு விமர்சித்த போதும் நமது செயற்பாடுகள் 100% ஒரே கோவையில் இல்லை என்பது நிர்ணயிக்க முடியாத தர்க்கம்.

அதில் நான் எதைச் சுட்டிக்காட்ட வந்தேன் என்றால், நமது ஊரைச் சேர்ந்த ஏ.ஆர்.எம். ரஸீம் என்பவரின் இயக்கத்தில் வெளியான 'வட்டி எண் 303' எனும் திரைப்பட அறிமுக வெளியீட்டு வைபவம் நேற்று கொழும்பு திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பல அரசியல் பிரமுகர்கள் வர்த்தகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து .... உம் திரைக்கு அரங்கேறியது. உணமையிலேயே குறித்த திரைப்படம் அரங்கத்தை அழ வைத்தமை இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டிய விடயமாகும்.

அற்புதமான வடிவமைப்புடன் ஆபாசமில்லா நடையமைப்புடன் ஒழுக்கவிழுமியங்கள் சார் உன்னத படைப்பாக இத் திரைப்படம் அரங்கத்தை கண் கலங்க வைத்தது.

தென்னிய திரைக்கு ஒப்பாக தயாரிக்கப்பட்ட இத் திரைப்படத்தை முழுமையாக வர்ணனை செய்ய முடியாது. ஏனெனில் திரையரங்குகளில் செல்லும் முன் நாம் சொல்வது பொருத்தமன்று.

இருந்தபோதிலும் நமது மண் கண்ட கலைஞர்களுக்கு நமது மண்ணில் ஏன் அங்கீகாரம் வழங்கப்படாமல் உள்ளது. (தயவு செய்து இவ்விடத்தில் மார்க்க ஞானிகள் குறுக்கு வாதம் புரிய வேண்டாம்) நிறுவினால் பல உண்டு! நியாயப்படுத்தினால் பலர் மூக்குடைய வேண்டி ஏற்படும்!  பிரதேச செயலகத்தினால் கலைக்கு ஒரு பிரிவு....! கலைஞர்களுக்கு சாகித்திய கௌரவிப்பு!!

இவ்வாறான நிகழ்வுகளில் இவர் போன்றவர்கள் கணக்கெடுக்கப்படாமைக்கு காரணம் என்ன? எத்தனையோ இளம் கண்டுபிடிப்பாளர்கள், வளர்ந்துவரும் தூரநோக்குசிந்தனையாளர்கள், சமூக இளம் ஆர்வலர்கள் இனங்கான மறு(ற)க்கப்படுகின்றார்களா?

சமூக அங்கீகாரம் வெளிச்சாயம் பூசப்படுவதை தற்காலத்தில் அவதானிக்கின்றோம். பலரின் திறமைகளை ஒரு சில காழ்ப்புணர்வுக் காவிகள் கசக்கிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், ஆக்கங்களை வெளிக்கொணர்ந்து பல்துறைசார் சமூக வள ஊக்கங்களுக்கு முனைப்புடையவர்களாக நாம் மிளிற வேண்டும்.

இது எம் மண் கானும் புதிய (நவீன) கலைஞர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம்....!

✍ கியாஸ் ஏ. புஹாரி
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe