Ads Area

விசேட தேவையுடையோருக்கு சமூகத்தில் சம வகிபாகம் வழங்கப்பட வேண்டும்.

பாறுக் ஷிஹான்  

விசேட தேவையுடையோருக்கு சமூகத்தில் சம வகிபாகம் வழங்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவில் இணைப்பாளர் ஏ. எல் இஸ்ஸதீன் தெரிவித்தார்.

புதன்கிழமை (7) காலை நாவிதன்வெளி கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற விசேட தேவையுடையோருக்கான செயலமர்வில் இக்  கருத்தை முன்வைத்தார்.

அங்கு தொடர்ந்து பேசுகையில் 

விசேட தேவையுடையோருக்கு சமூகத்தில் சம அந்தஸ்து வகிபாகம் வழங்கப்பட வேண்டும். சமூகத்தில் விசேட தேவையுடையோர் தேவைப்பாடுகள் இருக்கும் பட்சத்தில் அவர்களையும் இணைத்துக் கொண்டு சமூக செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

எங்களை நாங்களே   இரண்டாம் தர பிரஜையாக தாழ்த்திக் கொண்டு இருக்ககூடாது.சமூக செயற்பாடுகளில் தாமாகவே முன்வந்து ஈடுபட வேண்டும்.

விஷேட தேவையுடைய இன்று நாம் வீட்டில் முடங்கி விட முடியாது நமக்கான அடிப்படைக் கல்வியை தரவேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கின்றது.விசேட தேவையுடையோர்  கல்வி தொழில் வாய்ப்பு வியாபாரம் போன்றவற்றில் இணைத்துக்கொள்ளப்படவேண்டும். இவற்றுக்கான சட்டமூலங்கள் இப்போது பிரதேச செயலகங்களில் காணப்படுகின்றன.பல்கலைக்கழகங்களில் விஷேட தேவையுடையோருக்கு தனி பிரிவுகளும்  காணப்படுகின்றன என தெரிவித்தார்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe