சம்மாந்துறை நலன்விரும்பிகள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் M. H. M ஹாரிஸ் (நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்) தலைமையில் சம்மாந்துறை பிரதேச சபை சுகாதார சுத்திகரிப்பு ஊழியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் மற்றும் பகல் போசன விருந்து உபசாரமும் 2019.08.15 அன்று இடம்பெற்றது.
சம்மாந்துறைப் பிரதேசத்தில் கழிவகற்றல்-சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டு துாய்மையான சம்மாந்துறையின் பங்குதாரர்களாக இருக்கும் பிரதேச சபை ஊழியர்களுக்கு விருந்தளித்து, அவர்களை கௌரவித்த இந் நிகழ்வானது ஒரு முன்னுதாரண நிகழ்வாகும்.
நாம் வாழும் சூழலை சுத்தமாக வைத்து நாம் ஆரோக்கியமாக வாழ வழியமைத்துக் கொடுக்கும் துப்புரவுப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் என்றும் தலையில் துாக்கி வைத்துப் போற்றுதலுக்குரியவர்கள்.


