கந்தளாயில் ஓய்வு பெற்ற இராணுவ கொப்ரலின் முக்கிய ஆவணங்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாவுடன் காணாமல் போயிருந்தன அதனை சில மணி நேரங்களில் உரியவரிடமே ஒப்படைத்துள்ளார் மாணவி ஒருவர்.
கொப்ரல் ஜீ.ஜீ.தர்மதாஸ காலையிலேயே தனது மோட்டார் சைக்கிளுக்கான மாதாந்த கட்டணத்தை செலுத்துவதற்காக சென்ற போதே அவர் இந்த பையை தொலைத்துள்ளார்.
அந்த பையில் பணம் மற்றும் ஆவணங்களில் எந்தவொரு மாற்றமும் காணப்படவில்லை என கொப்ரல் தெரிவித்துள்ளார். வறுமையான அந்த மாணவியின் வீட்டிற்கு சென்ற கொப்ரல், அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாக வாக்குறுதியளித்துள்ளார். வறுமையிலும் நேர்மையாக செயற்பட்ட மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.