முஸ்லிம் “மதரசா” பள்ளிகளை கல்வியமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது இதனை கல்வியமைச்சர் அகில் விராஜ் காரியவசம் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கமகேவினால் புதிய பாடசாலைகளை பதிவு செய்வது தொடர்பிலான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே முஸ்லிம் “மதரசா” பள்ளிகளை கல்வியமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் மதரசா பள்ளிகளை கல்வியமைச்சின் கீழ் கொண்டு வருவது தொடர்பில் முஸ்லிம் மத விவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கல்வியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
புதிய கல்விச் சட்டத்தின் கீழ் சர்வதேச மற்றும் ஏனைய பாடசாலைகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.