Ads Area

நோயுற்ற தனது தொழிலாளியை குழந்தை போல் அரவனைக்கும் சவுதி முதலாளி.

இரத்தக் குறைபாடு நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த தன்னோடு வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்து தனது வீட்டுப் பிள்ளை போல் கவனித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஒரு சவுதி முதலாளி.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆதில் அலி எனும் வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் உடலில் கடுமையான இரத்தக் குறைபாடு நோயினால் அவதியுற்று வந்துள்ளார் இது குறித்து அவரது முதலாளி) கபீலான மாலிக் அலி சீட் அசேரி தெரிவித்தவுடன் அவர் தனது தொழிலாளியை சவுதி அரேபியாவில் உள்ள சிறந்த மருத்துவனை ஒன்றி உடனே  அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றார்.

அது மாத்திரமன்றி அவர் மருத்துவமனையில் இரவு நேரங்களிலும் தங்கியிருந்து தனது தொழிலாளியை கூட இருந்து தனது வீட்டுப் பிள்ளையைப் போல் கவனித்து வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு சவுதி இணையத்தளங்களும் அவரது செய்கையை பாராட்டியுள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe