Ads Area

தலைவரின் போட்டோவுக்கு கொடுக்கும் மரியாதையை அவருடைய மகனுக்கும் கொடுக்க மறுப்பது ஏன்.?

தலைவரின் போட்டோவுக்கு கொடுக்கும் மரியாதையை அவருடைய அன்பு மகனுக்கும் கொடுக்க மறுப்பது ஏன்.?

தலைவனின் போட்டோவை வைத்து அரசியல்செய்யும் அரசியல்வாதிகள் அந்த தலைவனின் பாசத்துக்குறிய ஒரே மகனைக்கூட கௌரவப்படுத்துவதற்கு முன்வரவில்லை என்கின்றபோது, இவர்களின் வங்குரோத்து அரசியல் என்ற நாகப்பாம்பு எந்தளவுக்கு படமெடுத்து ஆடுகின்றது என்பதை புரிந்துகொள்ளலாம்.

எது எப்படியிருந்தாலும் ஒருமனிதன் பேரும்புகழோடு வாழவிரும்புவது தான் உயிரோடு இருக்கும்போதோ அல்லது மரணத்துக்கு பின்போ தனக்கு கிடைக்கும் புகழும் பெருமையும் தன்னுடைய மனைவி பிள்ளைகளுக்கும் கிடைக்கவேண்டும் என்பதைத்தான் விரும்புவான். அதுதான் மனிதனின் இயற்கையான விருப்பமாகவும் இருக்கும்.

இந்த நிலையில் மறைந்த தலைவர் அஷ்ரப் உயிரோடு இருக்கும்போது தன்னுடைய ஒரே மகனை எவ்வளவு தூரம் நேசித்திருப்பார் என்பதை யாரும் சொல்லித்தான் தெரியவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன். அப்படி நேசித்த ஒரு மகனை அவர் கஷ்டப்பட்டு வளர்த்த இயக்கத்தில் இருப்பவர்கள் கால்தூசிக்கும் மதிக்காமல் நடந்துகொள்வது என்பது மறைந்த தலைவரின் ஆத்மா கூட ஏற்றுக்கொள்ளாது என்பதே உண்மையாகும்.

சமூகத்துக்காக உயிரைக்கொடுத்து போராடிய ஒருவருடைய மனைவியும் பிள்ளையும் அதற்காக எவ்வளவு தியாகங்களை செய்திருப்பார்கள் என்பதோடு, அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் நேரடியாக பாதிக்கப்படபோவது நாங்கள்தான் என்று தெரிந்தும் கூட அவருடைய போராட்டத்துக்கு பூரண ஆதரவு வழங்கியதெல்லாம் எதற்காக என்று நாம் சிந்திக்க தவறிவிடுகின்றோம். அஷ்ரப்பின் மரணத்துக்குபின் அவரது மனைவி நேரடி அரசியலுக்கு இறங்கியது சர்ச்சைக்குறிய விடயமாக இருந்தாலும், அவருடைய அன்புக்குறிய மகன் அமான் அஷ்ரப் எந்த நேரடி அரசியலிலும் ஈடுபட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் தலைவரின் மனைவியைத்தான் இந்த இயக்கம் பெருமைப்படுத்தாது விட்டாலும் அவருடைய மகனுக்காவது உரிய மரியாதையைக் கொடுத்து கௌரவபடுத்தலாம் அல்லவா?

இப்படிச் செய்வதனால் இவர்களுடைய அரசியல் இருப்புக்கு ஆபத்தாக வந்துவிடுமோ என்ற பயத்தின் காரணமாகவே தலைவரின் போட்டோவை வைத்து அனுதாப அரசியல் செய்தாலும் செய்வோமே தவிர, அவருடைய மகனுக்கெல்லாம் அந்தக் கௌரவத்தை கொடுக்கமாட்டோம் என்ற கீழ் தரமான என்னத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்த இயக்கத்தின் தயவால் வாழுகின்ற இந்த ஒட்டுண்ணி அரசியல்வாதிகள் நினைத்து செயல்படுகின்றார்கள் என்பதே மிகப்பெரிய உண்மையாகும்.

இந்த சதிகாரர்களின் என்னத்தை புரிந்துகொள்ளாத முஸ்லிம் மக்கள், பெருந்தலைவர் அஷ்ரப்பின் மனைவியையும் அவரது ஒரே மகனான அமான் அஷ்ரப்பையும் நினைத்தும்கூட பார்ப்பதற்கு முயற்சிக்கவில்லை என்கின்றபோது மிகவும் கவலையான விடயமாக தெரிகின்றது. எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் ஒரு இயக்கத்தை கட்டிவளர்த்த ஒருதலைவனின் குடும்பத்தை கால்தூசிக்கும் கணக்கெடுக்காமல், அவர்களின் கண்முன்னே எவரெவரோ ஆட்டம்போடுவதை பார்த்து யார்தான் பொறுத்துக்கொள்வார்கள். தன்னுடை கண்முன்னே தன்னுடைய தகப்பனின் பெயரைச்சொல்லி அரசியல் வியாபாராம் இவர்கள் ஒரு சரத்துக்காவது எங்களை கண்டுகொள்ள மறுக்கும் விடயத்தை எவராலும் தாங்கிகொள்ள முடியாது என்பதே உண்மையாகும். இப்படியான வேதனைகளை யாராலும் தாங்கிகொள்ளவும் முடியாது என்பதை இப்படியான நிலையில் மாட்டிக்கொண்டவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும் என்பதையும் யாராலும் மறுக்கவும் முடியாது.

ஆகவே அரசியலில் நமக்கு எங்கே போட்டியாக வந்துவிடுவாரோ என்று பயந்து நடுங்கும் இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளவேண்டும். அஷ்ரப் என்ற ஒரு ஆளுமை இல்லாது விட்டால் இந்த இயக்கம் இந்தளவு வளர்ந்திருக்குமா என்பதை என்னிப்பார்க்கவேண்டும். அந்த தலைவனின் நிலையில் வைத்து உங்கள் ஒவ்வொருவரையும் நிறுத்தி கற்பனை செய்துபாருங்கள். அப்படி ஒப்பிட்டுபார்த்தால் நீங்கள் எல்லோரும் கோமாளிகள் என்பது உங்களுக்கே புரியும். அப்படிப்பட்ட கோமாளிகளான நீங்கள் எவனோ தியாகம் செய்து வளர்த்த இயக்கத்தில் ஒய்யாரமாக அமர்ந்துகொண்டு, அந்தப் பெரும் தலைவனின் குடும்பத்தையே எட்டி உதைப்பதற்கு என்ன தகுதியுள்ளது என்பதை ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து பார்க்கவேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோளாகும்.

எனவேதான் சொல்லுகிறோம் அவர்களுக்கு அரசியல் அந்தஸ்தை வழங்காது விட்டாலும் அவர்களுக்கான உரிய மரியாதையைவாது கொடுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றோம். அதுதான் அந்த தலைவனுக்கு செய்யும் கைமாறு என்பதையும் மறந்து விடாதீர்கள்.

எம்எச்எம்.இப்றாஹிம்
கல்முனை..
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe