-நூருள் ஹுதா உமர்-
கல்முனை கல்வி வலயம், சாய்ந்தமருது கல்வி கோட்டத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கமு/கமு லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் எம். பாத்திமா நிப்லா எனும் மாணவி அண்மையில் நடைபெற்று முடிந்த வலய மட்டதிலான ஆங்கில தின பார்த்து எழுதல் போட்டியில் 2ஆம் இடத்தினைப் பெற்று மாவட்ட மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
கடந்த ஆண்டுகளில் இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகள் மாவட்ட, மாகாண, தேசிய ரீதியிலான விளையாட்டு மற்றும் மொழித்தின போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.