இலங்கையின் 14ஆவது பிரதமராக பதவிவகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான டி.எம். ஜயரத்ன, தனக்கு சொந்தமான வீதிய விளக்கமாறினால் துப்பரவு செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக பரவிவருகின்றது.
முன்னாள் பிரதமர் கண்டி- கம்பளை பிரதேசத்தில் உள்ள தனது காணியின் பாதையை துப்பரவு செய்கின்றார். முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன, வீதியின் ஓரத்தில் விளக்குமாறினைப் பிடித்து தனியாக துப்பரவு செய்து கொண்டிருக்கின்றார்.
உயர் பதவிகளில் சிலர் வந்த பின்னர் பழையவற்றை மறந்துவிடுவது வழக்கம். ஆனாலும் பலருக்கு மத்தியில் முன்னாள் பிரதமர் ஜயரத்னவின் இந்த செயற்பாடு ஓர் எடுத்துக்காட்டு.