ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் ஏற்பாடு செய்திருந்த தலைவர் ஞாபகார்த்த நிகழ்வும் விசேட துஆப் பிரார்த்தனை வைபவமும் சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரியில் இன்று(16) சுபஹ் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோகச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம். சகுபீர், சம்மாந்துறை ஜம்இயத்துல் உலமா சபையின் தலைவர் யூ.எல்.ஜலீல், உலமாக்கள், கட்சி ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.