கொழும்பில் நாளாந்தம் 100 மெற்றிக் தொன் உணவு குப்பையில் கொட்டப்படுவதாக தகவல்.
கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் நாளாந்தம் 100 மெற்றிக் தொன் உணவு குப்பையில் கொட்டப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. வீடுகள், உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தினசரி இவ்வாறு உணவுகள் குப்பையில் கொட்டப்படுகின்றன.
கொழும்பு நகரில் நாளாந்தம் 400 மெற்றிக் தொன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அவற்றில் 100 மெற்றிக் தொன் உணவுகள் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் போதுமான உணவு இன்மையினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், பெருந்தொகை உணவு குப்பையில் கொட்டப்படுகின்றமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.