ஐ.தே.கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித்துக்கு எதிரான சர்ச்சைக்குரிய பதாதை நீக்கப்பட்டது. மட்டக்களப்பு - கிரானில் சஜித் பிரேமதாசவுடன் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை இணைத்துக் கட்டப்பட்டிருந்த பதாதை இன்று நீக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்லுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிரான் சுற்று வட்டத்திற்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை இணைத்து நேற்றையதினம் பதாதை ஒன்று கட்டப்பட்டிருந்தது.