பாகிஸ்தானின் சிந்த் பகுதியில் இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் ஏற்பட்ட அசம்பாவீதத்தினால் அங்கு பதட்டமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிந்த் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் இந்து மதத்தை சேர்ந்த நோட்டன் மால் என்பவர் இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது இதன் காரணமாகவே அங்கு இந்து-இஸ்லாமியர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.