பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும உள்ளிட்ட 6 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த நபர்களை 6 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு மத்துகம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்த ஒருவரின் சடலத்தை மத்துகம பிரதேச தோட்டமொன்றிலுள்ள மயானத்தில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி அடக்கம் செய்தமை தொடர்பில் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.