தேர்தல் கடமைகளில் ஈடுபடுவோருக்கான தேர்தல் பயிற்சிநெறி நிந்தவூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் (2019-10-28) இடம் பெற்றது.
இந் நிகழ்வில் தேர்தல் நேரங்களில் பின்பற்ற வேண்டிய செயல்முறைகள், நடவடிக்கைள் சம்பந்தமாக பயிற்சிகளும், அறிவுரைகளும் வளவாளர்களால் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் ஓய்வு பெற்ற மாவட்ட காணி பதிவாளர் ஜனாப் நஸ்ருதீன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு தேர்தல் விதிமுறைகள், செயல்முறைகள் தொடர்பில் விளக்கமளித்தார்கள்.