தமக்குச் சொந்தமான காணி சுமார் ஒன்றரை ஏக்கர் காணி ஒன்றினை கண்டி வைத்தியசாலைக்கு இலவசமாக அன்பளிப்புச் செய்து அனைவரது பாராட்டினையும் பெற்றுள்ளர் முஸ்லிம் குடும்பத்தினர்.
கண்டி போதனா வைத்தியசாலை இலங்கையின் இரண்டாவது தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது, இந் நிகழ்விலேயே குறித்த முஸ்லிம் குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான காணியினை இலங்கை அரசுக்கு நன்கொடையாக எழுதி வைத்துள்ளனர்.
இந்த் காணி கண்டி பிரதான வீதியில் உள்ள முஸ்லிம் ஹோட்டல் உரிமையாளர்களுக்குச் சொந்தமானதாகும்.