Ads Area

தேசிய காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர்களுக்கான ஒன்றுகூடல் .

ஆசிப் மன்சூர்.

தேசிய காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர்களுக்கான ஒன்றுகூடல் 2019/10/29 அன்று இளைஞர் அமைப்பாளர் AAA.ஆக்கிப் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் தேசிய காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் மேலதிக தேசிய அமைப்பாளருமான கலாநிதி. அன்வர் முஸ்தபா மற்றும் தேசிய காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் வெளிவிவகார செயற்பாடுகளுக்கான செயளாலர் கலாநிதி SL.றியாஸ் மற்றும் தேசிய காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் MTA.கரீம் மற்றும் தேசிய காங்கிரஸின் அம்பாரை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி ஆசிக் மற்றும் பல கட்சி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். 


இந் நிகழ்வில் எதிர்வரும் ஐனாதிபதி தேர்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு அதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஐனாதிபதி தேர்தல் தொடர்பான தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டதோடு எதிர்கால இளைஞர் அமைப்பு வேலைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe