Ads Area

சம்மாந்துறை பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்..

(எம்.எம்.ஜபீர்)

சம்மாந்துறை பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபையின் 21ஆவது அமர்வு தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் சபா மண்டபத்தில்  இடம்பெற்றது.

இதன்போது வழமையான சபை நடவடிக்கையை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரினால் சம்மாந்துறை பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்பிக்கப்பட்டது.


இவ்வரவு செலவுத் திட்டமானது சம்மாந்துறை பிரதேச மக்களின் பங்களிப்புடன் தேவைகளையும், நலனையும் முன்னுரிமைப்படுத்தி, மக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அடங்கிய வரவு செலவுத்திட்டம் என்பதனால் பிரதேச சபையின் சகல உறுப்பினர்களின்  ஏகமனதான தீர்மாணத்துடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe