Ads Area

டுபாய் அரசு (UAE) அந் நாட்டில் வாழும் பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவிப்பு.

டுபாய் அரசு (ஐக்கிய அரபு ராஜ்ஜியம் அந் நாட்டில் வாழும் பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவிப்பு.

அடுத்து வரும் 3 நாட்களுக்குல் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் அதிகரித்த மழை இடி-மின்னல் நிகழவிருப்பதால் தொலைபேசி மற்றும் மின் உபகரணங்களின் பாவனையை தவிர்த்துக் கொள்ளும்படி ஐக்கிய அரபு ராஜ்ஜிய பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு அறிவித்துள்ளது (The National Emergency Crisis and Disaster Management Authority (NCEMA)

கடந்த சனிக்கிழமை ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் சார்ஜ்ஜா-Sharjah, அல்-ஹய்மா-Ras Al Khaimah, டுபாய்-Dubai  மற்றும் உம் அல் குவைன்-Umm Al Quwain போன்ற பிரதேசங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யதாகவும் இதனையெடுத்து எதிர் வரும் 3 நாட்களில் மேலும் இடி-மின்னலுடன் மழை பெய்யவிருப்பதால் அந் நாட்டு அரசு பொதுமக்களுக்கு அவரச எச்சரிக்கை விடுத்துள்ளது.


அதே போன்று மின் உபகரணங்களின் பாவனையையும் குறைத்துக் கொள்ளும் படியும் அவசியம் ஏற்படின் மிக அவதானமாக அவற்றை கையாளும் படியும் அறிவித்தல் விடுத்துள்ளது.

செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழ் - மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe