Ads Area

றவூப் ஹக்கீம் இந்த சமூகத்திற்கு உருப்படியாக ஏதாவது செய்ததை யாராவது நிரூபித்தால் அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறேன்.

றவூப் ஹக்கீம் இந்த சமூகத்திற்கு உருப்படியாக ஏதாவது செய்ததை யாராவது நிரூபித்தால் அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறேன்.

றஊப் ஹக்கீம் தலைவராக இருந்த காலம் இந்த சமூகத்துக்காக வரலாற்றில் செய்த ஒன்றையாவது யாராவது இந்த மேடையிலாவது வந்து சொன்னால் நான் அரசியலில் இருந்து ஓய்வெடுப்பேன். என தேசியகாங்கிறஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.


பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்து மருதமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் (08) இரவு மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே தேசியகாங்கிறஸ் கட்சியின் தலைவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்றைக்கு எல்லோருடைய மனதிலும் அச்சம் ஏற்பட்டு விட்டது. மஹிந்த ராஜபக்ஷ கோட்டாபய ராஜபக்ஷ வெல்லுவதை யாராலும் தடுக்க முடியாது. அல்லாஹ் அப்படித்தான் நாடியிருக்கிறான். கோட்டா வெல்லப் போகிறார் என்பதற்காக பல்லை இழித்துக் கொண்டு பங்காளியாக வேண்டும் என்பதும் அல்ல கோளைகளாக இருந்து வெல்ல வேண்டும் என்பதும் அல்ல. வரலாற்றில் மூன்று முi நன்றியுடையவர்களாக இல்லாமல் செய்யப்பட்டோம். இதற்கு பிராயசித்தம் தேடுவதைப் போன்று இந்தக்கட்டத்திலாவது கிழக்கு மக்களும், சாய்ந்தமருது மக்களும், மருதமுனை மக்களும் வாக்குப் போட்டார்கள் என்பது அவர்களுடைய மனங்களை மாத்திரமல்ல நாட்டை விடுதலை செய்வதற்கு உயிரை கொடுத்த அந்தத் தலைவர்கள் மனம்குளிர்ந்து போவார்கள்.


முதுகெலும்புள்ள ஒரு தலைவன் இன்த நாட்டுக்கு தலைவன் ஆகும் போதுதான் பயங்கர வாதிகளும் உளவளிகளும் இந்த நாட்டிலிருந்து விரட்டப்பட்டார்கள் என்ற செய்து உங்களுக்கு தேவையாகும். தேசியகாங்கிறஸ் அதன் வரலாறு முழுவதிலும் தீர்க்கமான முடிவுகளை சோரம்போகாமல் எடுத்திரக்கிறது. ஆசாத் சாலி போன்ற அயோக்கியர்களின் செய்திகளை இன்னமும் வாசிக்கின்ற சமூகமாக நாம் இருக்க முடியாது. நமது சமூகத்தை நாட்டின் தலைவர்களிடத்திலிருந்து பிரிக்கின்ற கைக்கூலி வேலைகளைத்தான் இவர்கள் செய்கிறார்கள் மக்களே! எனது உடன் பிறப்புகளே! அஸ்ரப்புக்கு அப்போது நோட்டிசடிச்ச இந்த முந்திரியங் கொட்டைகளுக்கு எமது மக்களின் பிரச்சினைகள் பரியுமா. நாம் அந்த மாமணிதர் அஸ்ரபின் பாசறையில் வளர்ந்தவர்கள் என்பதால் தான் இன்னமும் அவரது கொள்கைகளை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe