விருத்தாச்சலம் அருகே ஆண் வாரிசுக்காக கணவனுக்கு சிறுமியை இரண்டாவது திருமணம் செய்த மனைவி மற்றும் கணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வையங்குடி கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரின் மனைவி செல்லக்கிளி. இந்த தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ஆண் வாரிசுக்காக பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமியை கடத்தி திருமணம் செய்துள்ளனர்.
சிறுமி காணாமல் பெற்றோர்கள் விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் கடத்திச் சென்ற அசோக் குமார் மற்றும் செல்லக்கிளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.