கிழக்கு இளைஞர்கள் அமைப்பு-ஸ்ரீலங்கா வின் புதிய உறுப்பினர்களுக்கான நியமன சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது அமைப்பின் தலைவர், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தாணீஷ் றகுமத்துல்லாஹ் தலைமையில் சாய்ந்தமருது CIMS CAMPUS உயா்கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக CIMS CAMPUS தவிசாளரும், பிரபல சமூக சேவையாளருமான கல்விமான் கலாநிதி அன்வா் எம் முஸ்தபா சேர் அவா்களும் சிறப்பு அதிதிகளாக சந்தைப்படுத்தல் முகாமையாளா் றியால், ஊடகவியாளர் நூருள் ஹுதா உமர் அமைப்பின் செயலாளர் முஸ்தபா முபாறக் உட்பட அமைப்பின் பிரதி தலைவர் முஹம்மது சம்சீத், தேசிய அமைப்பாளர் முஹம்மது பைஸின், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் அமைப்பின் பிரதேச அமைப்பாளர்கள், மகளிர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகபிரிவு
கிழக்கு இளைஞர் அமைப்பு, ஸ்ரீ லங்கா.
2019.11.09