Ads Area

உலகில் வேலை செயற்படாமல் சம்பளம் எடுக்கும் ஒரே பதவி பாராளுமன்ற உறுப்பினர் பதவியாகும்.

வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பாராளுமன்றத்துக்கு வந்ததன் பின்னர் தனது கட்சியை மாற்றிக் கொள்பவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்கு தமது அரசாங்கத்தில் சட்டம் உருவாக்குவதாக தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறைப் பிரதேசத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டு மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டு வரும் உறுப்பினர் தனது கட்சியை மாற்றிக் கொண்டால், அவரது உறுப்பினர் பதவி மறுநாள் ரத்தாகும் விதத்தில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

உலகில் வேலை செயற்படாமல் சம்பளம் எடுக்கும் ஒரே பதவி பாராளுமன்ற உறுப்பினர் பதவியாகும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை பாராளுமன்றத்துக்கு சென்றால் போதும். வருடத்துக்கு நான்கு நாட்கள். ஐந்து வருடத்துக்கும் 20 நாட்கள் பாராளுமன்றம் சென்று வந்தால் போதுமானது. அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

இதனாலேயே நாம் அரசாங்கத்துக்கு வந்தவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வோம் என்று தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe