தேர்தல் முடிவடைந்ததும் முஸ்லிம்கள் மீது அராஜகங்கள் கட்டவிழ்த்துவிடப்படும்.
குறிப்பிட்ட ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கும் தீவிரவாதக்குழு ஒன்று தேர்தல் முடிவடைந்ததும் முஸ்லிம்கள் மீது தமது அராஜகங்களை கட்டவிழ்த்துவிடும் என்று ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
தாம் ஏற்கனவே இராணுவத் தளபதியாக இருந்தவர் என்ற அடிப்படையிலும் புலனாய்வுப்பிரிவின் தலைவராக இருந்த அடிப்படையிலும் இந்த தகவலை பொறுப்புடன் கூறுவதாக மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.