சிங்கள வாக்குகள் மூலமே நான் வெற்றி பெற்றதாக புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் உரையாற்றுகையில் இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ இதனைக் கூறி இருந்தார்.
அத்துடன் எந்த ஒரு நாட்டிலும் தேர்தல் இடம்பெறும்போது மக்களிற்கு வாக்களிக்கும் உரிமை எவ்வளவு சுதந்திரமுள்ளதோ அதேபோல விரும்பியவரை தேர்ந்தெடுப்பதற்கும் அவர்களிற்கு முழு சுதந்திரம் உள்ளது.
இவ்வாறான நிலையில் கோத்தபாய சிங்கள வாக்குகள் மூலம் வெற்றி பெற்றிருந்தாலும் , அவர் அப்படி கூறியதை எண்ணி எந்த தமிழரோ அல்லது முஸ்லிம்களோ கவலைப்பட வில்லை எனவும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏனேனில் குறித்த இந்த இரண்டு சமூகத்தின் வாக்கும் ஒரு சிங்கள வேட்பாளருக்கே அளிக்கப்பட்டதே தவிர தமிழருக்கோ அல்லது முஸ்லிம்களிற்கோ அல்ல எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.