எம்.பி.எம். அன்வர்.
இலங்கை இராணுவத்தின் 24 வது படைப்பிரிவின் மல்வத்தை இராணுவ தலைமையகம் உருவாக்கப் பெற்று 7 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு மஜீட்புரம் ஜும்மாப் பள்ளிவாசலில் நடைபெற்ற இரானுவத்தினரை கௌரவிக்கும் நிகழ்வு.
இந் நிகழ்வில் மல்வத்தை இரானுவ தலைமையகத்தின் முக்கிய இரானுவத் தளபதிகள், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.பி.எம்.அன்வர், மஜீட்புர பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.
இராணுவத்தினரை பள்ளிவாசலினுல் அழைத்து அவர்களை கெரளவித்து, நட்புப் பாராட்டியமையானது சிறந்த ஒரு முன்மாதிரியான, சகோதரத்துவமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.