ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்ப அனுரகுமார திஸாநாயக்க சஜித் பிரேமதாசவுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க அழைப்பு விடுத்தார். மாத்தறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்க, மஹேஷ் நேனநாயக்க ஆகியோர் சஜித் பிரேமதாசவைப் போன்று இந்நாட்டை நேசிப்பவர்கள். நாட்டை ஊழல் மோசடிகளிலிருந்து பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திரமான, சிறந்ததொரு நாட்டை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் கொண்டவர்கள். ஆனால் எமது எதிர்த்தரப்பில் போட்டியிடும் கோத்தாபய ராஜபக் ஷ இந்த விடயங்கள் அனைத்துக்கும் முரணானவர். பல குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர். இப்படிப்பட்டவரால் நாட்டை கொண்டுசெல்ல முடியாது.
அத்துடன் சஜித் பிரேமதாசவின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டு நாட்டுக்கு சேவைசெய்ய மக்கள் விடுதலை முன்னணி முன்வரவேண்டும். அந்தக் கட்சியில் திருடர்கள் யாரும் இல்லை. நாட்டுக்காக எமது அமைச்சுப் பதவிகளை தியாகம் செய்ய நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஏனெனில் ராஜபக் ஷ குண்டர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்கவேண்டும் என்றார்.
விடிவெள்ளி.