நான் இப்போது அமெரிக்கக் குடிமகன் இல்லை. நான் சுத்த இலங்கையன். அதற்குரிய ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நான் சமர்ப்பித்துவிட்டேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்கக் குடியுரிமை தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சி தரப்பு சட்டத்தரணிகள் கூறும் கருத்துக்களை நாட்டு மக்கள் நம்பவே கூடாது. அவர்கள் எனது வெற்றிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பல வழிகளில் செயற்பட்டு வருகின்றார்கள்.
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நேர்மையின் பிரகாரம், எனது கட்சியின் ஏகோபித்த தீர்மானத்தின் பிரகாரம் இந்த நாட்டு மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனேயே வேட்பாளராகக் களமிறங்கியுள்ளேன்.