மரணதண்டனை கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினால் நீதிமன்றங்கள் எதற்கு..?? - ஹிருணிக்கா.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியுமானால் நீதிமன்றங்கள், நீதிபதிகள் எதற்காக நாட்டில் இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
றோயல் பார்க் கொலையின் பிரதான குற்றவாளிக்கு ஜனாதிபதி அண்மையில், பொது மன்னிப்பு வழங்கியதையிட்டு நாம் மிகவும் கவலையடைகிறோம்.
இது முற்றுமுழுதாக ஜனாதிபதியின் தனிப்பட்ட நோக்கமே ஆகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோத்தபாய ராஜபக்சவின் பிரச்சார மேடைகளில் கலந்து கொள்ளாவிட்டாலும் கூட அவர் கோத்தபாயவிற்கே ஆதரவாக செயற்பட்டு வருகின்றார்.
இந்த நிலையில் துமிந்த சில்வாவையும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய மாட்டார் என்று என்ன நிச்சயம் உள்ளது? என கேள்வியெழுப்பியுள்ளார்.