ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு இன்று அனுராதபுரத்தில் நடைபெற்றது இந் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் நான் சிங்கள மக்களின் வாக்குளினால்தான் வெற்றி பெற்றேன் இருந்தாலும் நான் அனைவருக்குமான ஜனாதிபதிதான்.
ஆனால் நான் இந்த நாட்டில் அனைத்து மக்களுக்குமான ஜனாதிபதி. ஆகவே மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன். எதிர்காலத்தில் இந்த நாட்டை முன்னேற்றி அபிவிருத்திப் பாதையில் ஒன்றாய் முன்னோக்கிச் செல்ல என்னோடு கைகோர்துக்கொள்ளுங்கள்.” எனக் கூறினார்.