வீசப்பட்டது..! முன்னாள் அமைச்சர் ஏ.ஆர் மன்சூர் அவர்களின் புகைப்படமல்ல, நன்றியுள்ள ஒவ்வொரு உடன்பிறப்பின் உணர்வு..
கல்முனை மாநகரை கனதியுடன் வடிவமைத்து;காலத்தில் நிலைத்து நிற்க; கச்சிதமாய் உழைத்த முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்களால் பல தியாகங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் உருவாக்கப்பட்ட கல்முனை பொது நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட உருவப்படத்தினை அரசியல் காழ்புணர்ச்சியால் உதாசீனம் செய்ய முற்பட்டு, புகைப்படத்தை கழற்றி குப்பை கூடைக்குள் போட முயன்றமை; சமூகத் தலைவனை அகௌரவப் படுத்தும் ஒரு ஈனச் செயலாகும்.
காலம் எமக்களித்த இத் தலைவன் எமது மண்ணின் பிறக்கவில்லை என்றால்...., கல்முனை மாநகரம் "கனவனை இழந்த மனைவி போல்" கோலம் குளைந்து, அனாதையாக கிடந்திருக்கும் என்பது நாம் யாவரும் அறிந்தது மட்டுமல்ல,இன்றும் உணர்ந்து கொண்டு இருக்கின்றோம்.
எமது சமூகத்தின் நிலையான இருப்புக்கும் உயர்வுக்கும் தூர நோக்குடன் இனம், மதம் பாராது சேவையாற்றிய மகானின் உருவப்படத்தை கழற்றி குப்பைக் கூடைக்குள் போடுமளவுக்கு மனம் வந்த உங்களை "மிருகம்" என்று சொன்னாலும் மிருங்களும் வெட்கித் தலைகுனியும் என்பதையும் மறவாதே! வேறு சமூகத்தில் இவ்வித்தகன் பிறந்திருந்தால் எத்தனை சிலைகள் எங்கெங்கோ முளைத்திருக்கும் என்பதை சிந்தித்துப் பார்..! வரலாறுகளை மழுங்கடிக்கச் செய்யலாம்...ஆனால் இறைவன் இருக்கும் வரை சத்தியத்தை ஒரு போதும் அசத்தியமாக்க முடியாது.
இப்படியான ஈனச் செயல்கள் இனியும் அரங்கேறாமால் இருப்பதற்கு..இறைவன் எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாப்பானாக..!
Mifras Mansoor