Ads Area

தமிழகத்தில் விருதுகளைப் பெற்றுத் திரும்பிய தேசபந்து ஜலீல் ஜீக்கு சம்மாந்துறையில் பாராட்டு விழா.

தமிழகத்தில் நடைபெற்ற இலக்கிய பெருவிழாவில் பல விருதுகளை பெற்று இலங்கை மாதாவின் பெயருக்கு புகழைத் தேடித் கொடுத்த வரலாற்று ஆய்வாளர். தேசமான்ய.தேசபந்து. ஜலீல் ஜீ யை பாராட்டி வரவேற்கும் நிகழ்வு அண்மையில் சம்மாந்துறை FIL FIL AH ரெஸ்ட்ரூரண்ஸ்ஸில் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது சம்மாந்துறை பாவலர் பஸீல் காரியப்பர் ரசிகர் வட்டம் - ஸ்ரீ லங்கா அமைப்பின் ஏற்பாட்டில்  சம்மாந்துறை வட்டியில்லா வங்கி - மத்ரசத்துல் இஸ்லாமியு  அமைப்பின் தலைவரும், முன்னாள் பிரதேச சபையின் தவிசாளர் கலாநிதி. அல்-ஹாஜ். ஐ.எம். இப்ராஹீம் தலைமையில் இடம்பெற்றது. 


விருது பெற்ற விருதாளர் தேசபந்து ஜலீல் ஜீக்கு நிகழ்வில் கலந்து கொண்ட ஊரின் பிரதிநிதிகளினால் மாலைகள் அணிவிக்கப்பட்டு, பொன்னாடைகள் போர்த்தப்பட்டு கௌரவம் அளிக்கப்பட்டது.











Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe