Ads Area

சம்மாந்துறையில் ஒரு மணித்தியாலத்தில் 3000 அங்கத்துவர்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுனையில் இணைவு.



ஐ.எல்.எம் நாஸிம்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 51 கிராமசேவகர் பிரிவிற்கான இணைப்பாளர்கள், அங்கத்துவர்களை  தெரிவு செய்யும் நிகழ்வு  இன்று (01) சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும் சிறிலங்கா பொதுஜன பெரமுன் இன் சம்மாந்துறை தொகுதி இணைப்பாளரும் வை.எம் முஸம்மில் அவர்களின் தலைமையில் அவரின் இல்லத்தில் இடம் பெற்றது.


இன் நிகழ்வில் பிரதம அதிதியாக   அம்பாறை மாவட்ட பொதுஜன பெரமுன பிரதான அமைப்பாளர்,வனவிலங்கு வன பாதுகாப்பு ராஜங்க அமைச்சரும் விமல் வீர திஸ்ஸாநாயக்க அவர்களும் மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உயர் பீட உறுப்பினர்களும் கட்சியின் ஆதரவாளர்களும்  கலந்து  கொண்டனர்.


மேலும் இந் நிகழ்வில் வண்டிக்கார சங்கம்,விவசாய அமைப்பு,இளைஞர் அமைப்பு,மகளிர் அமைப்புக்கள்,சமூக சேவை அமைப்புக்கள் கலந்து கொண்டதுடன் ஒரு மணித்தியாலத்தில் 3000 அங்கத்துவர்கள் இணைந்து கொண்டனர் குறிப்பிடத்தக்கது.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe