குஜராத் மாநிலம் சூரத் கட்டர்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ்(வயது 48) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது), ஜவுளி தொழிலதிபர். இவரது மகனுக்கும் நவ்ஸரி பகுதியை சேர்ந்த வைர கைவினைஞர் ஒருவரின் மகளுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் 2-வது வாரம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த 10 ந்தேதி முதல் மணமகனின் தந்தை - மணமகளின் தாயும் அவர்களது வீட்டில் காணவில்லை . இருவரும் இணைந்து எங்கோ தலைமறைவாகி விட்டார்கள். இதனால் மணமகன் - மணமகள் இரு குடும்பங்களுக்கும் மிகவும் சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து இரு குடும்பத்தினரும் போலீசில் புகார் அளித்து உள்ளனர். இதனால் தற்போது திருமணம் நின்று போய் உள்ளது.