பெட்ரோல் பங்குகளில் நாள்தோறும் நடக்கும் பகல் கொள்ளை தெரியுமா உங்களுக்கு? இப்படியுமா ஏமாற்றுவார்கள் என்று என்னை ஆச்சரியம் அடைய வைத்த ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன்- இனிமேல் யாரும் இவ்வாறு ஏமாறக் கூடாது என்பதற்காக. வழக்கமாக இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் இவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்.
அதாவது, நீங்கள் கவனித்தது உண்டா – பெட்ரோல் முழுமையாக உங்கள் டேங்கில் நிரம்பும் முன்னதாகவே கையில் உள்ள லாக்கை அழுத்தி விடுவார்கள்.
எவ்வாறெனில், பெட்ரோல் பம்ப் மீட்டர் ஒரே சீராக இயங்கினால்தான் சரியாக 100 ரூபாய்க்கு பெட்ரோல் இறங்கும். நடுவில் தடை செய்யப்பட்டு பின்னர் மீண்டும் இயங்கினால், மீட்டர் recalibration ஆகி குறைவான அளவு பெட்ரோல் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்.
பெட்ரோல் போடும் நபர் விசையை அழுத்த இப்போது அனுமதிப்பதில்லை. பெட்ரோல் முழுமையாக இறங்கும் முன் விசையை அழுத்த முயற்சித்தால் கூடாது என எச்சரிக்கிறேன். தற்போதெல்லாம் என்னை பார்த்தாலே அவர்கள் உஷார் ஆகி விடுகிறார்கள். விசையின் மீது கையை வைப்பதே இல்லை.விழிப்புடன் இருங்கள். ஏமாற்றப்படுவதை தவிருங்கள்.
றுமைஸ்.