ஈராக்கில் உள்ள இரு அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.
25ற்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.
இந்த ஏவுகணைகள் ஈரானிலிருந்து ஏவப்பட்டுள்ளன,அல் அசாத் மற்றும் இர்பில் பகுதியிலுள்ள அமெரிக்க படையினரின் இலக்குகளை இவை தாக்கியுள்ளன என அமெரிக்க பாதுகாப்பு செயலாளரின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
சேத மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளோம், இந்த தளங்களை ஈரான் தாக்கலாம் என்பதால் நாங்கள் முன்னெச்சரிக்கை நிலையில் வைத்திருந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.