1) பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பெறல்
2) கிழக்கு மாகாண சபை ஆட்சி அமைத்தல்
இந்த இரண்டு விடயங்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு தேவைப்படும் என்பதை - இன்றைய அரசு மிகத்தெளிவாக புரிந்துவைத்துள்ளது. அதனால், மு.கா தொடர்பாக அடக்கி வாசிக்குமாறு - மேல் மட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.
"அடிப்படைவாதிகள் இல்லாத அரசை அமைப்பதாக" முன்வைக்கப்படும் கருத்து - எதிர்வரும் பொதுத்தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளை கூட்டி - அதனூடாக ஆசனங்களை அதிகரித்து கொண்டு - பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை நோக்கி நகர்வதற்கான - ஒரு தேர்தல் தந்திரோபாயமே அன்றி வேறில்லை" எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே வீணாக மு.காவை சீண்ட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதான் பலமிக்க "இயக்க அரசியலின்" முக்கியத்துவம்.
மு.கா இதற்கு சம்மதிக்குமா? இல்லையா? என்பதெல்லாம் வேறு விடயம்.
ஆனால், அதன் வகிபாகம் தவிர்க்க முடியாதது என்பதுதான் முக்கியமான விடயம்.
🏿யாருடையதாவது தயவை எதிர்பார்த்து காத்திருக்கும் "தனிநபர் அரசியல்" சமூகத்திற்கு அபாயமானது.
🏿"பயன்படுத்தல்" என்ற சதி அல்லது தந்திரத்திற்கு - விலைபோகும் அபாயம் அதில் தவிர்க்க முடியாத அம்சம்.
"முஸ்லிம்களில் எத்தனை எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள் என்பதல்ல; தக்க தருணத்தில் அவர்கள் எப்படி பதிலளிக்கிறார்" என்பதே விடயம்.
அது இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான காலத்தில் உணரப்பட்டதனாலேயே - மு.காவின் தேவையும் - அதன் அவசியமும் உணரப்பட்டு - உயிர்கொடுக்கப்பட்டது.
மு.கா என்ற அதிர்வில் அதிகாரம் பெற முடியாதோரும் - அதிகாரத்தை கைப்பற்றியும் மு.காவின் துணையின்றி நிலைக்க முடியாதோரும் - மு.காவை பலவீனப்படுத்தாமல் தமக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பதால் - ஊருக்கொரு முஸ்லிம் தலைவர்களை உருவாக்கி - இலங்கை முஸ்லிம்களின் பலத்தை கூறுபோட தீட்டிய சதியில் வீழ்ந்த தனிநபர்கள் - அமைச்சுக்களையும் அரச கவனிப்புக்களையும் பெற முடிந்ததே தவிர - ஸ்தீரமான அரசியல் இருப்பை அடைய முடியவில்லை.
ஆனால், மு.கா அப்படியல்ல;
எதிர்க்கும் போது எதிர்ப்பதும் - இணக்கப்பாடு அவசியமெனில் இணங்கி போவதும் மு.காவிற்கு சவால் அல்ல. ஏனெனில் அது சொந்தக்காலில் நிற்கும் பலமிக்க ஒரு சமூக இயக்கம்.
அதன் மௌனமும் ஆர்ப்பாரிப்பும் வேறுபட்ட அரசியல் மொழிகள் என்பதை - அரசியலை ஆழ்ந்து கவனிப்பவர்கள் மட்டும் புரிந்துகொள்ளலாம்.
விளங்கி இருக்கிறது என்பதால்தான் - மு.காவை விமர்சிப்பதை நிறுத்துமாறு மேல் மட்ட உத்தரவு பறந்திருக்கிறது.
இதை எப்போதோ கீழ் வருமாறு சொல்லி இருந்தேன்:-
"அரசு மாறினால் குப்பையில் கிடப்பதற்கும்;
அறவே வேண்டாம் என்று தள்ளி வைப்பதற்கும்;
மு.கா ஒன்றும் கொல்லையில் முளைத்த கொடியல்ல;
முல்லையில் வளர்ந்து முற்றிய முதிரை மரம்."
- ஏ.எல்.தவம் -