கொழும்பு நகரில் இலத்திரனியல் வாகன தரிப்பிட கட்டணத்தை செலுத்தத் தவறியவர்களின் வாகன டயர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டணத்தை செலுத்துமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், பணம் செலுத்த தவறிய உரிமையாளர்களின் வாகனங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான வாகனங்கள் அவதானிக்கப்பட்டு அவற்றுக்கு இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
கார்களுக்கான வாகனத் தரிப்புக் கட்டணம் 100 ரூபா எனவும், முச்சக்கர வண்டிக்கான தரிப்புக் கட்டணம் 40 ரூபா எனவும், கனரக வாகனங்களுக்கான தரிப்புக் கட்டணம் 1200 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.