முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறவுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் ஊர்ஜிதமாக தெரிவித்தார்.
கட்சியை விட்டு வெளியேறவுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவரைத் தொடர்பு கொண்ட வேளையிலேயே மாஹிர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், கட்சியை விட்டு வெளியேறுகின்ற அவர் எந்தக் கட்சியில் இணைந்து தனது அடுத்த அரசியல் நகர்வை மேற்கொள்வுள்ளார் எனும் தகவலை இதுவரையில் அவர் ஊர்ஜிதப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலைமையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் அ.இ.ம.கா., தே.கா. அல்லது பொதுஜன பெரமுன ஆகிய மூன்றிலொரு கட்சியில் இணைந்து பயணிக்க வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் ஊடாக அறிய முடிகின்றது.
தகவல் - கியாஸ் ஏ புஹாரி.