முஸ்தபா றஸ்மி.
மதிப்புக்கூரிய தவிசாளர் அவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் எமது பிரதேசத்தில் உள்ள ஹிஜ்ரா பொது சந்தையில் முன்பாக அமைந்திருக்கும் bike parking யில் சில நடைமுறை சிக்கல் இருக்கின்றது.
எமது மக்களில் சிலர் பொது சந்தைக்கு வரும் போது அவர்களுடைய வாகனங்களை அவர்களுக்கு ஏற்ற முறையில் [இஸ்டப்படி] நிறுத்தி வைப்பதால் ஏனைய மக்கள் தங்களுடைய துவிச்சக்கர வண்டிகளை, மோட்டார் சைக்கிள்களை, கார்களை நிறுத்திவைப்பதற்கும் மீண்டும் அதனை எடுப்பதற்கும் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
ஆகையால் உங்கள் நிர்வாகத்தில் உள்ள இரண்டு ஊழியர்களை ஒரு சில தினங்களுக்கு கடமை புரிய வைத்து சந்தைக்கு வரும் மக்களிடம் உங்கள் வாகனங்களை ஒழுங்காக வைப்பதற்கு சில வழிகாட்டளை நடைமுறை படுத்தவும் இது எனது அன்பான வேண்டுகோள்.