இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் ஒருவரின் இடமாற்றதிற்காக அந்த மாணவர் அழுது எல்லோருடைய மனதை பதற வைத்தது காணொளி வலையதளங்களில் மிக வேகமாக பரவியாதுகாண கிடைத்தது.
பின்தங்கிய பிரதேசத்தில் உள்ள இந்த படசாலையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருந்த கால கட்டத்தில் வேர்கள் பிடிங்கி கல் அகற்றி மண் இட்டு செப்பனிட்டு பாடசாலை ஆரம்பம் ஆன நாளில் இருந்து கடந்த கிழமை வரை பாடசாலைக்காண சேவை மன பூர்வமாக செய்தது அந்த பிரதேச மக்கள் மனதில் பசு மரத்தில் ஆணி போல் இருக்கும் என்றும்
மாணவர்கள் பாடசாலைக்கு தொடர்ந்து வருகை தர வில்லை என்றால் அவர்களின் வீடு தேடி சென்று விசாரித்து வறுமையின் பிடியை விளங்கி குறையை நிறை வேற்றி அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்து பாடசாலை ஏற்றி சென்றவர் எங்களின் அதிபர் எப்படி எங்களுக்கு மறக்க முடியும் என பெற்றோர்களும்
பாடசாலை களைந்ததும் எங்களை அழைத்து செல்ல எங்களது பெற்றோர்கள் தாமதம் ஏற்பட்டால் அதிபர் மோட்டார் சைக்கிள் ஏற்றி வீட்டுக்கு கொண்டு விடுவார் என மாணவர்களும்
நாங்கள் விடுமுறை என்றால் தான் அந்த வகுப்பிற்கு ஆசிரியராக மாணவர்களுக்கு கற்றுகொடுக்கும் உயர்ந்து விரிந்த சிந்தனை கொண்டவர் என்றும்
ஒவ்வொரு பிள்ளைகளையும் தன் பிள்ளையாக நினைத்து கல்வி வளர்ச்சிகாக பாடசாலையில் அதிக நேரம் செலவு செய்த அதிபரின் இடமாற்றம் மாணவர்கள் பெற்றோர்கள் என்று ஏற்று கொள்ள முடியாத கண்ணீர் அவரின் உன்னத சேவையை பறைசாற்றி நிற்கிறது
வாழ்வு என்பது மற்றவர்களின் உள்ளத்தில் நாம் மறைந்தாலும் வாழ்வது என்பதே
நான் அவரிடம் கற்றது இல்லை ஆனால் என்னை அதிகம் கவர்த்த அதிபர் மனிதம் என்ற உயர்ந்த பண்பினால்
இரு உலகிலும் அவருக்கு
இறைவன் அருள் புரிவனாக
தகவல் - நபிசாட் அபூ ஹன்சிப் and அறபாத்.