காலி-பின்னதூவ அதிவேக நெடுஞ்சாலையின் வலஹன்தூவ பகுதியில் சொகுசு பிராடோ ஜீப் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ஜீப் ரக வாகனமும் காலி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.