Ads Area

சம்மாந்துறையில் தொழில் வழிகாட்டல் மற்றும் இலவச கல்விக் கருத்தரங்கு.



நூருல் ஹுதா உமர்.

க.பொ.த உயர் தர பெறுபேறுகளை பெற்ற மற்றும் க.பொ.த சாதாரண பரீட்சை முடித்த இளைஞர் யுவதிகளுக்காக க்றவுன் இன்டர்நேஷனல் அகடமி  (crown international Academy ) மற்றும் பாஸ்,எஸ்ஸோ சமுக சேவைகள்  அமைப்புக்கள்   இணைந்து நடாத்திய "இலவச  தொழில் வழிகாட்டல் மற்றும் கல்விக் கருத்தரங்கு (27) எம்.என்.எம். சிப்காவின் தலைமையில் அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது. 


இக்கருத்தரங்கில் பிரதான வளவாளராக க்றவுன் இன்டர்நேஷனல் அகடமியின் தலைவர் விரிவுரையாளர் ஹிஷாம் கரிம்,மற்றும்  இந்திய பல்கலைக்கழக விரிவுரையாளர் ஸ்டாலின் செபஸ்தியான் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் எதிர்காலத்தில் எவ்வாறான துறைகளை தெரிவு செய்வதன் மூலம் இலகுவாக தொழில் வாய்ப்புக்களை தெரிவு செய்ய முடியும் என்பது பற்றி விரிவுரையாற்றினார்கள்.

இரு அமைப்புக்களினதும் உபதலைவர் எ.எம்.இன்சாப் அவர்களின் ஒருங்கினைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், இரு  அமைப்பினதும் முக்கியஸ்தர்கள், க்றவுன் இன்டர்நேஷனல் அகடமி  அதிகாரிகள் உட்பட பிரதேச  இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டனர்.


இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe