(எம்.எம்.ஜபீர்)
நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரர்ப்பன நிகழ்வும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வரவேற்கும் நிகழ்வும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வு நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.மதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இணையத்தளத்தினை அங்குரர்ப்பனம் செய்துவைத்தார்.
இதன்போது நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவியேற்ற வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனை வரவேற்று நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.மதனினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் நீதி நேர்மையை பறைசாற்றும் வகையில் தாரசு சின்னமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.