சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் ஜெயசந்திரன் அவர்களால் பயனாளர்களுக்கு கொங்ரீட் கலவை இயந்திரங்கள் வழங்கி வைப்பு.
சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் ஜெயசந்திரன் அவர்களின் முயற்சியினால் சம்மாந்துறைப் பிரதேசத்தில் உள்ள கொங்ரீட் தொழிலில் ஈடுபடும் கூலித் தொழிலாளிகளின் வாழ்வாதாரங்களை உயர்த்தும் நோக்கில் அவர்களுக்கு கொங்ரீட் கலவை இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் முதற்கட்டமாக கொங்ரீட் தொழிலில் ஈடுபடும் 10 குழுவினருக்கு அதற்கான உபகரணங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.
ஒரு உபகரணத்தொகுதி 500,000.00 இலட்சம் எனும் அடிப்படையில் 10 பேருக்கு 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டு அளவான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சம்மாந்துறைப் பிரதேச சபை உப தவிசாளர் திரு. ஜெயசந்திரன், சம்மாந்துறைப் பிரதேச செயலக செயலாளர் திரு. ஹனீபா மற்றும் பயனாளர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.