Ads Area

கேரளாவைச் சேர்ந்த மணமகள் அஜ்னா நிஷாம் மணமகனிடம் கேட்ட வித்தியாசமான மஹர்.

கேரளாவைச் சேர்ந்த மணமகள் அஜ்னா நிஷாம் மணமகனிடம் கேட்ட வித்தியாசமான மஹர்.

கேரளாவைச் சேர்ந்த மணமகன் இஜாஸ் ஹக்கீம் மற்றும் மணமகள் அஜ்னா நிஷாமுக்கும் இடையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது திருமணத்தின் போது முஸ்லிம் மணமகன் மணமகளுக்கு மஹர் கொடுப்பது வழக்கம் மஹரை மணப் பெண்னுக்கு பணமாகவோ, நகையாகவோ வழங்க முடியும் மணமகள் தான் கேட்கும் மஹரை மணமகன் வழங்க வேண்டும்.

இந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த மணமகள் அஜ்னா நிஷாம் தன்னை திருமணம் செய்ய முன் வந்த மணமகனிடம் தனக்குப் பிடித்தமான 100 புத்தகங்களை மஹராகக் கேட்டுள்ளார். மணமகள் கேட்ட அத்தனை புத்தகங்களையும் தேடிப்பிடித்து வாங்கிக் கொடுத்து பெண்ணின் கரத்தினைப் பற்றி திருமண வாழ்வில் இணைந்துள்ளார் மணமகள் இஜாஸ் ஹக்கீம்.


இந்தச் செய்தி தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது இது தொடர்பான மேலதிக செய்திக்கு இந்த லிங்கை கிளிக் செய்யலாம் https://m.edexlive.com

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe