Ads Area

கேரளாவில் பள்ளிவாசல் ஒன்றில் இந்து ஜோடிகளுக்கு ஹிந்து முறைப்படி திருமணம் நடாத்த ஏற்பாடு.

கேரள மாநிலம் ஆலம்புழாவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் கேரள ஜோடிக்கு எதிர் வரும் 19ம் திகதி ஹிந்து முறைப்படி திருமணம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

கேரளா ஆலம்புழா மாவட்டத்தில் செருவல்லி பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இந்த பள்ளிவாசலுக்கு அருகே வசித்து வந்த அசோகன் என்பவர் கடந்த 2018 இல் இறந்தார் இதனையடுத்து அவரது குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது.

அந்தக் குடும்பத்திற்கு செருவல்லி பள்ளிவாசல் ஜமாத்தினர் பல உதவிகளை செய்து வந்தனர். இந் நிலையில் அசோகனின் மகள் அஞ்சுவுக்கு திருமணம் நிச்சயமானது திருமண செலவுக்காக செருவல்லி ஜமாத்திடம் அசோகன் குடும்பத்தினர் உதவி கோரியிருந்தனர்.

இதனையடுத்து, அஞ்சுவுக்கு 10 சவரண் நகையும் 2 இலட்சம் ரூபாய் நிதியும் வழங்க ஜமாத் கமிட்டி முடிவு செய்து திருமணத்தை பள்ளிவாசல் வளாகத்திலேயே நடாத்திக் கொள்ளவும் அனுமதியளித்தது. இதனையடுத்து அஞ்சுவுக்கு எதிர் வரும் 19ம் திகதி பள்ளிவாசல் வளாகத்தில் திருமணம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி செருவல்லி ஜமாத் கமிட்டி செயலாளர் கூறுகையில், இந்தத் திருமணத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் இதற்காக நாங்கள் எங்களது ஜமாத் சார்பில் அழைப்பு விடுக்கின்றோம் மேலும் 1000 பேருக்கு திருமண விருந்தும் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம் எனவும் கூறினார்.

செய்தி மூலம் https://www.telegraphindia.com
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe