காரைதீவு சகா.
இருபது வருட கால வரலாற்றிலே இன்று முதலாவது ஒன்றுகூடலை அதுவும் கல்வி சார் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் இணைந்து நடாத்துகிறோம். இதுவும் ஒரு வகையில் சாதனைதான். ஏலவே பலசாதனைகளைப் படைத்துவரும் எமது வலயம் புத்தாண்டிலும் பல சாதனைகளை படைக்குமென்பதில் ஜயமில்லை.
இவ்வாறு சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர்எம்.எஸ்.சஹதுல் நஜீம் தெரிவித்தார்.
பிரதிக்கல்விப்பணிப்பாளர் அ.ஸ.அகமட் கியாஸ் ஏற்பாட்டில் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்திய இந்நிகழ்வில் பணிப்பாளர் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டுரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
எமது சாதனைகளுக்கு உரமூட்டிய எமது கல்வி சார் சாரா உத்தியோகத்தர்கள் சிலர் எம்மைவிட்டு பிரிகின்றனர்.அது எமக்கு இழப்பாகவிருக்கின்றது. சிறந்த பல ஊழியர்கள் இடமாற்றப்பட்டுள்ளமை கவலைக்குரியது. எனினும் அது அரசநியதி.
வலய கல்விசார் குழுவிலிருந்து ஓய்வுபெற்றுச்சென்ற உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ.ஆப்தீன் ஆசிரியஆலோசகர்களான பி.கோஸ்முகைடீன் எம்.அலியார் எஸ்.ருத்ரா எஸ்.சங்கரப்பிள்ளை மற்றும் ஓய்வுபெற்றுச்சென்ற பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் கோட்டக்கல்விப்பணிப்பாளர் ச.சரவணமுத்து ஆகியோருக்கு பிரியாவிடை சேவைநலன்பாராட்டுவிழா நடைபெற்றது.
கல்விசாரா அணியிலிருந்து இடமாற்றலாகிச்சென்ற பொறியியலாளர் என்.அருண் கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி பிரதமமுகாமைத்துவ உதவியாளர் எம்.முஸ்தபா பதவிநிலை உத்தியோகத்தர் திருமதி திலகா பரமேஸ்வரன் முகாமைத்துவ உதவியாளர்களான த.நேசராகவன் எம்.மபாஸ் பி.மபாஸ் எஸ்.ருபிணி எவ்.பர்சானா எவ்.றிஸ்னா எவ்.நஸ்பா எம்.அறபாத் ஆகியோருக்கு பிரியாவிடை வைபவம் இடம்பெற்றது.