செரெண்டிப் சிறுவர் இல்லத்தினரால் சுழிபுரத்தில் அமைந்துள்ள சிவபூமி முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு உடுபுடவைகள், தலையணைகள், படுக்கை விரிப்புகள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
செரெண்டிப் இல்ல நிர்வாகத்தினர் தலைமையில் நேற்று 06.01.2020 காலை 10 மணியளவில் சுழிபுரம் சிவபூமி நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ரூ.60,000/= பெறுமதியான உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
செரெண்டிப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியான கந்தசாமி மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டு உதவிப்பொருட்களை வழங்கி வைத்ததுடன் முதியோர்களுடன் கலந்துரையாடினார்
யோ.கமல்ராஜ்